PPF கணக்கு துவங்கி சேமிப்பு செய்யலாமா? என்ன நன்மைகள்?
Saturday 12 October 2024
PPF என்று அழைக்கப்படும் Public Provident Fund என்பது தமிழில் பொது வருங்கால வைப்பு நிதி என்று சொல்லப்படுகிறது. இந்த PPF திட்டத்தை மத்திய அரசால் ஆதரிக்கப்படும் வரியில்லா சேமிப்பு திட்டம் என்று சொல்லலாம். இந்த PPF திட்டம் 1968 ஆம் ஆண்டு நிதி அமைச்சகத்தால் கொண்டுவரப்பட்டது. இது இந்தியர்களிடையே சேமிப்புப் பழக்கத்தை வளர்ப்பதற்காகவும், தனியார் பாதுகாப்பில் பணிபுரியும் மக்களுக்கு ஓய்வூதிய பாதுகாப்பை வழங்குவதற்காகவும், அமைப்பு சாரா தொழிலாளர்கள், அல்லாத ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனங்களில் வேலை செய்வோர், கடை வைத்து சிறு தொழில் செய்வோர், விவசாயம் செய்வோர், கூலி வேலைக்கு செல்வோர் போன்றவர்களுக்கும் இத்திட்டம் கொண்டுவரப்பட்டது.
Read more...